ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 06:13 pm
a-polling-booth-in-gir-forest-has-been-set-up-for-1-voter-in-junagadh-gujarat

குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது.

குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியின் அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார்.

அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. 

பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த  வாக்குச்சாவடிக்கு கிடைத்துள்ளது.

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு, ஒரு வாக்காக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. 

என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கருத்து தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close