இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம்: வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

  முத்து   | Last Modified : 27 Apr, 2019 08:11 pm
indians-do-not-go-to-sri-lanka

இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தியர்கள் அவசியமின்றி இலங்கை  செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அவசியம் மற்றும் அவசர தேவை தவிர இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. 

தவிர்க்க முடியாத காரணத்தால் இலங்கைக்கு பயணம் செய்வோர் உதவி தேவைப்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் தொடர்  குண்டுவெடிப்பை அடுத்து நிலவி வரும் பதற்றம் காரணமாக இந்தியர்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close