ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு: கேரளாவில் 3 இளைஞர்களிடம் விசாரணை

  ராஜேஷ்.S   | Last Modified : 28 Apr, 2019 04:32 pm
contact-with-isis-investigation-into-3-youth-in-kerala

கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்ரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 இளைஞர்களிடம் சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு  ஐஎஸ்ஐஎஸ் பயங்ரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு இது தொடர்பாக காசர்கோட்டில் வழக்கு பதியப்பட்டது. அதையடுத்து பல்வேறு இஸ்லாமிய இளஞர்கள் ஐஎஸ் அமைப்புடன் கொண்ட தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி ஓர் இளஞர் அவருடைய மனைவியுடன் சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், 2016 ஆண்டு தொடரப்பட்டிருந்த ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பான வழக்கில் காசர்கோர்ட்டை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பாலகாடைச் சேர்ந்த ஒரு  இளைஞனிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close