பலாத்காரம் செய்து கிணற்றில் வீசப்பட்ட 2 சிறுமியர் உடல் மீட்பு

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 05:05 pm
bodies-of-girls-suspected-to-be-raped-found-in-abandoned-well

தெலுங்கானாவில், பலாத்காரம் செய்யப்பட்ட கிணற்றில் வீசப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில், மற்றொரு சிறுமியின் உடலும் கிடைத்துள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம், ஹாஜிபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அங்கு சோதனையிட்ட போலீசார், அழுகிய நிலையில், சிறுமியின் உடலை மீட்டெடுத்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமி, பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டது தெரிய வந்தது. 

இந்நிலையில், கொலையாளி பற்றிய துப்பு கிடைக்கிறதா என போலீசார் சாேதனையிட்டதில், அதே கிணற்றில், இன்னொரு பெண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது. அது, 45 நாட்களுக்கு முன், காணாமல் போன அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியின் உடல் என அடையாளம் காணப்பட்டது. 

மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த சிறுமியும், கொலை செய்யப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. இது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close