நக்சல் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர், முதல்வர் கண்டனம்

  ராஜேஷ்.S   | Last Modified : 01 May, 2019 09:33 pm
naxal-attack-president-and-chief-minister-condemned

மகாராஷ்டிர  மாநிலம், கட்ச்ரோலியில் கமாண்டோ படை மீதான நக்சல் தாக்குதலுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கமாண்டோ படை மீதான நக்சல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும், வன்முறைக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது" எனவும் கூறியுள்ளார்.

இதேபோல், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, நக்சல் தாக்குதலில் உயிரிழந்த 16 வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனம் மீது நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 16 வீரர்கள் பலியாகினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close