கேரளா: மாணவிகள் முகத்தை மூடும் வகையிலான உடைக்குத் தடை!

  முத்து   | Last Modified : 02 May, 2019 03:08 pm
kerala-students-block-face-closure

கேரள மாநிலத்தில் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் முகத்தை மூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உடல் மற்றும் முகத்தை முழுவதும் மூடும் வகையில் அமைந்துள்ள உடையான பர்கா அணிந்து இரு இஸ்லாமிய பெண்கள் தற்கொலைப் படையினராக செயல்பட்டுள்ளது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து இலங்கையில் முகத்தை மூடும் வகையிலான உடைக்கு தடைவிதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது.

 இந்த நிலையில், அதேபோல, கேரளாவில் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் முகத்தை மூடும் வகையிலான உடை உடுத்தி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தனது அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு கேரள இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close