திரிபுரா: 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு !

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 10:48 am
tripura-re-elecrtion-at-168-constituencies

மேற்கு திருபுரா நாடாளுமன்றத் தொகுதியில் 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள தொகுதிகளில்  மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேற்கு திரிபுரா மேற்கு நாடா ளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் மற்றும் கள்ள ஓட்டு தொடர்பாகவும், தேர்தல் ஆணையத்தில் புகார்  அளிக்கப்பட்டது. 
 
புகாரின் அடிப்படையில், தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து பெற்ற அறிக்கையில், திரிபுரா மேற்கு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.  முறைகேடுகள் நடந்தது உறுதியானதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது எனவும், இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close