தங்கச் சுரங்க மாநிலத்தில்... மாணிக்கக் கற்களின் நகரம்...!

  இளங்கோ   | Last Modified : 09 May, 2019 10:41 am
city-of-ruby

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், மலபிரபா நதியின் வடகரையில் அமைந்துள்ளது பட்டடகல். இவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டடக்கல்  சாளுக்கியர்களின் முற்காலத் தலைநகர்களில் ஒன்று  விளங்குகிறது. பட்டடக்கல் என்றால் மாணிக்கக் கற்களின் நகரம் என்று பொருள். பெயருக்குப் பொருத்தமாகத் திகழ்வதுபோல், செம்பாறைகளில் செதுக்கப்பட்ட அற்புத உலகம்தான் பட்டடக்கல். சாளுக்கியர்களின் புகழ்பெற்ற சிற்பங்கள், கற்கோயில்கள் காணப்படும் பதாமி மற்றும் அய்ஹோலுக்கு அருகே காணப்படுகிறது பட்டடக்கல். 

வேசரபாணி கட்டடக்கலையின் தொடக்கமாகப் பட்டடக்கல் கோயில்களைக் கருதுகிறார்கள்.  இந்த நகரத்தில் சாளுக்கிய மன்னர்களால் 7ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒன்பது முக்கியமான சிவன் கோயில்கள் மற்றும் ஒரு ஜைன கோயில், மன்னர்கள் பட்டம் சூட்டிக்கொள்வதற்காக இந்த நகரம் அமைக்கப்பட்டதால் செல்வச் செழிப்பு மிக்க தலைநகராகக் உள்ளது.

திராவிடக் கட்டிடக் கலையையும், வட இந்தியக் கட்டிடக் கலையையும் சேர்த்து இங்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பட்டடக்கல் சிற்பங்கள் மற்றும் கற்கோயில்கள் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக் அறிவித்துள்ளது..   இந்த அற்புதமான கலப்பு அம்சத்தை விருபாக்‌ஷா கோயிலில் நன்றாகக் காணலாம்.  இந்தியக் கட்டடக்கலையின் பல்கலைக்கழகம் என்று அறிஞர்களால் புகழப்படும் அளவுக்கு சிறப்பான சிற்பங்களையும் கோயில்களையும் கொண்டிருக்கிறது. 

1,200 வருடங்களைக் கடந்து சிவப்பு மணல் பள்ளத்தாக்கில் எழிலுடன் காணப்படுகின்றன பட்டடக்கல் கற்கோயில்கள்.  சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது.

எங்கே நோக்கினும் அந்தத் திசையெங்கும் அழகான சிற்பங்களும் கோயில்களும் நம் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கின்றன. பட்டடக்கல்லில் பல கோயில்கள் இருந்தாலும் அவற்றில் விருபாட்சர் கோயில், காளகநாதர் கோயில், ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், மல்லிகார்ஜுனர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில், காட சித்தேஸ்வரர் கோயில ஆகியனவாகும். 

மேற்க்கண்ட கோவில்கள் அனைத்தும் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக  இருக்கும். கோயில்களின் வெளித் தோற்றம் மிக அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் முப்பரிமாணத் தோற்றத்தில், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களும் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களும் கலைநயம் மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close