புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 07:43 am
two-terrorists-killed-in-pulwama

புல்வாமாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமிடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்றுவரும் நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவும அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close