நாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங்

  ராஜேஷ்.S   | Last Modified : 16 May, 2019 03:43 pm
nathuram-godse-was-a-deshbhakt-pragya-singh-thakur

நாதுராம் கோட்சே ஒரு சிறந்த தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பிரக்யாசிங் தாகூர், ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தாராக இருந்தார்; இருக்கிறார்; இன்னும் இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். அவரை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close