ஆதார்: லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 05:18 pm
aadhaar-facilities-for-lock-and-unlock

ஆதாரை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி வந்துள்ளதாக  பிரத்யேக அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரத்யேக அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஆதார் லாக் மற்றும் அன்லாக் வசதியை பெற முடியும். 

GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 6 இலக்க கடவுச்சொல் (OTP) வந்து சேரும். 

LOCKUID ஸ்பேஸ் ஆதாரின் கடைசி 4 இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க (OTP) கடவுச்சொல்லை டைப் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் ஆதார் எண் லாக் ஆகி விடும்; அதற்கான தகவலும் செல்போனுக்கு வந்து சேரும். 

www.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை லாக் செய்யவோ அல்லது அன் லாக் செய்யவோ முடியும் என்று அறிவித்துள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close