7-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 07:17 pm
7th-lok-sabha-election-the-campaign-ended

இறுதி மற்றும் 7-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வடைந்தது. மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டதால் நேற்று இரவு 10 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் நாளை மறுநாள் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகளிலும் பிரச்சாரம் ஓய்வடைந்தது. நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளிலும் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4 தொகுதிகளில் கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட வெளியாட்கள் வெளியேற தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவின்போது நடைபெற்ற முறைகேடு மற்றும் தவறுகளால் 13 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close