அதிர்ச்சி செய்தி: தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 06:35 pm
shocking-news-15-dead-including-students-in-a-fire-accident

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் என கூறப்படுகிறது. 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர்  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close