பாகிஸ்தான் வான்பரப்பில் பிரதமரின் விமானம் பறக்க அனுமதி கோரும் இந்தியா! 

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 09:49 pm
india-asked-prime-minister-modi-s-plane-to-fly-in-pakistan-airspace

பாகிஸ்தான் வான்பரப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் செல்ல அனுமதி அளிக்குமாறு பாகிஸ்தானிடம்இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 13 -ஆம் தேதி கிர்கிஸ்தான் செல்கிறார். பாகிஸ்தான் வான்வழியாக தான் கிர்கிஸ்தானுக்கு செல்ல வேண்டும்.

இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து, கடந்த பிப்ரவரி 26 -ஆம் தேதி முதல் தங்கள் வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வழியாக கிர்கிஸ்தான் செல்ல அனுமதி அளிக்கக் கோரி இந்தியா பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close