கத்வா சிறுமி பாலியல் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  முத்து   | Last Modified : 10 Jun, 2019 07:29 pm
kathua-case-three-have-been-sentenced-to-life-imprisonment

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்வா எனுமிடத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கத்வாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, பஞ்சாப்  மாநிலம், பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், குற்றவாளிகளான ஊர் தலைவரும், கோயில் பூசாரியுமான சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலைமைக் காவலர் திலக் ராஜ், உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த தத்தா, சுரிந்தர் வர்மா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், கோயில் பூசாரி சஞ்சிராமின் மகன் விஷாலை, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close