நீட் கவுன்சிலிங்: அகில இந்திய கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 03:15 pm
neet-counselling-2019-schedule-for-admission-to-15-all-india-quota-has-been-released

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வில் அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில்(All India Quota) உள்ள மாணவர்கள் வருகிற ஜூன் 19 முதல் 24ம் தேதி வரை இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த நாட்களில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பெயர்களை மாணவர்கள் அளிக்க வேண்டும். 

இறுதியாக, ஜூன் 25ம் தேதி காலியிடங்களின் அடிப்படையில் உங்களுக்கான கல்லூரியை தேர்ந்தெடுத்து இறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கும் பணிகளானது ஜூன் 26ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களை https://mcc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலமாக காணலாம். 

 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படியும், மீதியுள்ள 85% காலியிடங்கள் மாநில அரசுகளுக்கென ஒதுக்கீட்டின்படியும் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close