உளவுத்துறைக்கு புதிய தலைவர் நியமனம்: மத்திய அரசு அதிரடி

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2019 05:02 pm
new-chiefs-for-ib-and-raw-in-india

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு நேரடியாக தகவல் அளிக்கும் ரா மற்றும் ஐபி அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டு விவகாரங்கள், அங்கிருந்து நம் நாட்டிற்கு வரும் அச்சுறுத்தல்கள், அந்த நாடுகளின் போக்கால் நமக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து, அது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தரும் அமைப்பு ரா. 

இதன் புதிய தலைவராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சமந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2016ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிரா சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போதும், 2019 பிப்ரவரியில் பாக்., ராணுவ விமானங்கள் துரத்தியடிக்கப்பட்டு, அங்கு இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போதும், முக்கிய பங்காற்றினார். 

இவர், சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு நெருக்கமானவர் என கருதப்படுவர். காஷ்மீர் பிரிவினைவாதிகளை கையாள்வது, இடதுசாரி பிரிவினைவாதிகளால் உள்நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வந்தது உள்ளிட்ட பல விஷயங்களை சிறப்பாக கையாண்ட அர்விந்த் குமார், ஐபி எனப்படும் உள்நாட்டு விவகாரங்களை கையாளும் உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது இந்த முடிவெடுக்கப்பட்டது. இந்த இரு அமைப்புகளின் தலைமையும், நேரடியாக பிரதமரிடம் தங்கள் பணி குறித்த விவரங்களை தெரிவிப்பர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close