மும்பையில் கனமழை: சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 10:00 am
heavy-rain-at-mumbai

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்ய துவங்கியது. இன்று காலை வரை மழை தொடர்ந்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

புறநகர் ரயில் சேவையிலும் சிறிய அளவில் கால தாமதம் ஏற்பட்டதால், காலை பணிக்கு செல்லும் மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், நாடு முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்த கனமழை மும்பைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close