வளர்ச்சித்திட்டங்கள் குறித்து இரு மாநில முதல்வர்கள் ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 01:45 pm
andhra-telangana-cm-s-meeting-hyderabad

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அதற்கு இரு மாநில அரசுகள் வழங்க வேண்டிய பரஸ்பர ஒத்துழைப்பு, உதவிகள் குறித்தும் இரு மாநில முதல்வர்களும் இன்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தினர். 

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சித் தலைவர் ஜெகன்மாேகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள முதல்வர் சந்திரசேகர ராவ், தாெடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார். 

இந்நிலையில், இரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, இரு மாநில முதல்வர்களும் ஐதராபாத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார். ஒருங்கிணைந்த ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்ட பின், இரு மாநில முதல்வர்களிடையே கடும் போட்டி மனப்பான்மை நிலவி வந்தது. 

இந்நிலையில், இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close