மத்திய பட்ஜெட் 2019 மீள் பார்வை - பகுதி 2

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:10 pm
budget-2019-review-part-2

கடந்த, பிப்ரவரி மாதம், அப்போதைய மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களின் மீள் பார்வை: 

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் மீதான, டி.டி.எஸ்., உச்சவரம்பு, 1.80 லட்சம் ரூபாயிலிருந்து, 2.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சாெந்த வீடு வாங்குவதில் முதலீடு செய்வதன் மூலம், மூலதன வரி விலக்கு பெறுவோர், இனி இரண்டாவது சாெந்த வீட்டிற்கும் அந்த சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இது ஒரே ஒரு முறை, வாழ்நாள் சலுகையாக அதை பெறலாம் என முக்கிய அறிவிப்பு வெளியானது.

குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்களில் செய்யும், முதலீட்டின் மூலம் கிடைக்கும், வருமானத்தின் மீதான வரி விலக்கு சலுகை, மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொழில் நிறுவனங்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. 

விற்பனையாகாமல் கிடங்குகளில் தேங்கியிருக்கும், பொருட்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை, ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக நீட்டிக்கப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறிய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய சலுகை அளிக்கப்பட்டது. 


மாநிலங்களுக்கான வருவாய் பகிர்வு ,42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையால், உற்பத்தி மாநிலங்கள் மிகப் பெரிய அளவில் வரி வருவாய் இழப்பை சந்திப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கும் முற்றுப் புள்ளிவைக்கப்பட்டது. 

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் ஏழை, எளியவர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. 


அனைவருக்கும் உணவு திட்டத்தை செயல்படுத்த, 1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. இதன் மூலம், வறுமையை ஒழிப்பதுடன், நாட்டில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த முடியும் என மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

நாட்டின் 21 வது எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானாவில் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 

தொடரும்...
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close