மத்திய பட்ஜெட் 2019: அறிந்ததும், அறியாததும்!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:35 pm
union-budget-special

சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய நிதியமைச்சர் ஓர் தமிழர். ஆம், நாட்டின் முதல் மத்திய நிதியமைச்சரான, கோயம்புத்துாரை சேர்ந்த, ஆர்.கே.சண்முகம் செட்டியார், 1947 நவம்பர் மாதம் 26ம் நாள் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எனினும், இந்த பட்ஜெட் ஓராண்டுக்கானதாக இல்லாமல், வெறும் ஆறு மாதங்களுக்கானதாக மட்டுமே இருந்தது. 

தற்போது, நாட்டின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன், 89வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாெரார்ஜி தேசாய், அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் அதிகபட்சமாக, 10 முறை மத்திய நிதி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 

மிக அதிக வார்த்தைகள் இடம் பெற்ற பட்ஜெட் தாக்கல் செய்த நிதிமயமைச்சர் என்ற பெருமையை, முன்னாள் பிரதமரும், மத்திய நிதியமைச்சருமாக இருந்த மன்மோகன் சிங் பெற்றுள்ளார். இவர், 1991ம் ஆண்டு வாசித்த பட்ஜெட் உரையில், 18,177 வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. 

மாெரார்ஜி தேசாய்க்குப் பின், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிகபட்சமாக 9 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close