மத்திய பட்ஜெட் மீள் பார்வை - பகுதி 3

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:49 pm
union-budget-review-part-3

கடந்த பிப்ரவிரியில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய தகவல்களின் தொகுப்பு இது. இதில் இடம் பெற்ற அறிவிப்புகளின் நீட்சியாகத்தான் நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இருக்கப்போகிறதா அல்லது மேலும் பல புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கடந்த பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய திட்டங்கள்: 

மத்திய அரசு வசூலிக்கும் ஜி.எஸ்.டி., வரியிலிருந்து மாநில அரசுகளுக்கு, குறைந்தபட்சம், 14 சதவீதம் அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

பிரதமரின் கிஷான் யோஜனா எனப்படும் விவசாயிகள் நல திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரண்டு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகை, மூன்று தவணைகளாக, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அப்போதைய நிதியமைச்சர் அறிவித்தார்.

கால்நடை பராமரிப்புக்காக, 750 கோடி ரூபாய் செலவில் புதிய ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றது. கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடனுக்கு, 2 சதவீத வட்டி சலுகை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட, விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு, 2 சதவீத வட்டி சலுகை அளிக்கப்படும் எனவும்,  தவணை தவறாமல் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு, 3 சதவீத வட்டி சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. 

பணிக்கொடைக்கான வரி விலக்கு உச்ச வரம்பு, 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

மாத சம்பளம் 21 ஆயிரம் ரூபாய் வரை பெறும் தொழிலாளர்கள் போனஸ் பெறும் தகுதி பெறுவர் என்ற அறிவிப்பு, தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

முறைசாரா தொழிலாளர்கள், மாதம், 100 ரூபாய் செலுத்துவதன் மூலம், 60 வயதிற்குப் பின், ஒவ்வொரு மாதமும், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெற வழி வகை செய்யப்பட்டது. 

ஆறு கோடி வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்த அமைச்சர், மேலும், 8 காேடி வீடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறினார். 

கர்பிணிகளுக்கு, 26 வாரங்கள் பேறுகால விடுப்பு அறிவிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்துள்ள, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு, கடன் தொகையில், 2 சதவீத சலுகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்திற்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி அறிவிப்பு வெளியானது. 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் என்ற மிகப் பெரிய அறிவிப்பு வெளியானது. 

இந்திய திரைப்படங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, திரைத்துறையினருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. 

இதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டே, பொது பட்ஜெட் அளவிற்கு அனைத்து தரப்பினரின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததாக பொருளாதார வல்லுனர்கள், பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், புதிதாக நிதிமயைச்சர் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இதிலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close