மத்திய பட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 11:24 am
union-budget-2019-important-announcements

பார்லிமென்ட்டில் பட்ஜெட் உரையை வாசித்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அவற்றில் சில...

போக்குவரத்து துறையிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகை போக்குவரத்தைிற்கும், ஒருங்கிணைந்த ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

போக்குவரத்து துறையை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ‛உடான்’ திட்டத்தின் மூலம் சிறிய நகரங்களுக்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இது, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close