மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 11:45 am
union-budget-important-announcements

பார்லிமென்ட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்லா சீதாரமன் வாசித்து வரும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்: 

100 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும். 

சில்லரை வணிகம், காப்பீட்டுத்துறை மற்றும் விமான சேவை துறைகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 100 சதவீத அன்னிய முதலீட்டுக்க அனுமதி அளிக்கப்படும். 

கடந்த 5 ஆண்டுகளில், 7 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கிராமங்கள் தான் நம் நாட்டின் உயிர் நாடு என மகாத்மா காந்தி கூறியது போல், கிராமங்களையும், கிராம மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. கிராமம், கிராமவாசிகள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

அனைத்து கிராமங்களையும் ஊரகப்பகுதிகளுடன் இணைக்க தரமான சாலைகள் அமைக்கப்படும். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ், தார், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்படும். 

2022ம் ஆண்டுக்குள் 1.95 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும். அதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். 

தொடரும்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close