வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம்: அமைச்சர் நிர்மலா அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 11:54 am
budget-2019-water-plan

பார்லிமென்ட்டில் மத்திய பட்ஜெட்டை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 

‛‛நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். அதன் படி, 2024ம் ஆண்டு, ஒவ்வொரு வீட்டிலும் தங்குதடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படும். இதற்காக, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

விவசாயத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே சமயம், விவாசய துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பும் தேவைப்படுகிறது. அதற்கு மத்திய அரசு ஊக்கமளிக்கும். இதற்காக பல சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

கிராமங்களை முன்னேற்ற மத்திய அரசு சிறப்பான வகையில் திட்டங்களை முன்னெடுத்து செல்லும்’’ என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close