பார்லிமென்ட்டில் பட்ஜெட் உரையை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர் கல்வி திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
நம் நாட்டு மாணவர்களின் உயர் கல்வி தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.
நம் மாணவர்கள், உயர் கல்வி மற்றும் ஆராயச்சி படிப்புகளை இங்கேயே தொடருவதற்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தி தரப்படும். அதே போல், வெளிநாட்டு மாணவர்கள் பலரும் இந்தியாவில் உயர் கல்வி பயிலும் நிலை உருவாக்கப்படும்.
உலகிலேயே தலைசிறந்த கல்வி திட்டம் உடைய நாடாக இந்தியா உருவாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, கூறினார்.
newstm.in