மத்திய பட்ஜெட் 2019:முத்தான முக்கிய திட்டங்கள்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 01:21 pm
union-budget-2019-main-points

நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில், அரசின் பங்கு குறைந்தபட்சம் 51சதவீதம் இருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு தொடரும். 

உயர் கல்வியை மேம்படுத்த, புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் இந்திய கல்வி முறை முதலிடம் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கான சிறப்பு டிவி சேனல் உருவாக்கப்படும்.

போக்குவரத்து துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிவில் விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தி, தரமான சேவை வழங்க நடவடிக்க எடுக்கப்படும். 

உடான் திட்டத்தின் மூலம், பல்வேறு சிறு நகரங்களில் விமான போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

கிராமப்புறங்களை, ஊரக பகுதிகளுடன் இணைக்க தரமான சாலைகள் அமைக்கப்படும். 

5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமான உரியவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை. அதே போல்,  வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயம் அல்ல. ஆதார் எண் இருந்தால், அதை குறிப்பிட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். 

ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறை 25 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு முன், 250 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 25 சதவீத வரி செலுத்தி வந்தன. இதன் மூலம், நாட்டில் செயல்படும், 99.3 சதவீத நிறுவனங்கள் 25 சதவீத வரி விதிப்பு வரையறைக்குள் வருகின்றன. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 10லிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 

என, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். 
 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close