பான் கார்டு இல்லாமலும் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 03:52 pm
there-is-no-need-of-pan-card-for-filing-income-tax

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, பான்கார்டு இல்லாதோர், அதற்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தி, வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பார்லிமென்ட்டில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது குறித்து கூறியதாவது: ‛‛வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய பான் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பான் கார்டு இல்லாதோர் அது குறித்து கவலைப்பட வேண்டாம். பான் எண்ணிற்கு பதிலாக, தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்’’ என்றார். 

ஏற்கனவே, பெரும்பாலான பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் இருந்தால் போதும் என்ற அறிவிப்பு, ஆதாரின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close