மத்திய பட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள் ஓர் பார்வை

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 06:02 pm
union-budget-2019-main

பார்லிமென்ட்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல முக்கிய அறிவிப்புகளை வெளிட்டார். அவற்றில் சில...

போக்குவரத்து துறையிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகை போக்குவரத்தைிற்கும், ஒருங்கிணைந்த ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

போக்குவரத்து துறையை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ‛உடான்’ திட்டத்தின் மூலம் சிறிய நகரங்களுக்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இது, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

நாட்டின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஒரே நாடு ஒரே மின்சார வினியோக திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். 

இதன் மூலம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சீரான மின் வினியோகம் செய்ய முடிவதுடன், அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் கிடைப்பதோடு, மின் வினியோகம் பரவலாக்கப்படும் 

நம் நாட்டு மாணவர்களின் உயர் கல்வி தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.

நம் மாணவர்கள், உயர் கல்வி மற்றும் ஆராயச்சி படிப்புகளை இங்கேயே தொடருவதற்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தி தரப்படும். அதே போல், வெளிநாட்டு மாணவர்கள் பலரும் இந்தியாவில் உயர் கல்வி பயிலும் நிலை உருவாக்கப்படும். 

உலகிலேயே தலைசிறந்த கல்வி திட்டம் உடைய நாடாக இந்தியா உருவாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 

நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். அதன் படி, 2024ம் ஆண்டு, ஒவ்வொரு வீட்டிலும் தங்குதடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படும். இதற்காக, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

விவசாயத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே சமயம், விவாசய துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பும் தேவைப்படுகிறது. அதற்கு மத்திய அரசு ஊக்கமளிக்கும். இதற்காக பல சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

கிராமங்களை முன்னேற்ற மத்திய அரசு சிறப்பான வகையில் திட்டங்களை முன்னெடுத்து செல்லும். 

நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில், அரசின் பங்கு குறைந்தபட்சம் 51சதவீதம் இருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு தொடரும். 

உயர் கல்வியை மேம்படுத்த, புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் இந்திய கல்வி முறை முதலிடம் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கான சிறப்பு டிவி சேனல் உருவாக்கப்படும்.

உடான் திட்டத்தின் மூலம், பல்வேறு சிறு நகரங்களில் விமான போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

கிராமப்புறங்களை, ஊரக பகுதிகளுடன் இணைக்க தரமான சாலைகள் அமைக்கப்படும். 

5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமான உரியவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை. அதே போல்,  வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயம் அல்ல. ஆதார் எண் இருந்தால், அதை குறிப்பிட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். 

ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறை 25 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு முன், 250 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 25 சதவீத வரி செலுத்தி வந்தன. இதன் மூலம், நாட்டில் செயல்படும், 99.3 சதவீத நிறுவனங்கள் 25 சதவீத வரி விதிப்பு வரையறைக்குள் வருகின்றன. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 10லிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 

வருமான வரி செலுத்த ஆதார்  இருந்தால் போதும்.  வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் எண் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

பொது துறை வங்கிகள் மேம்பாட்டிற்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். 

பெட்ரோல், டீசல் மீதான வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படும்.

என, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். 
 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close