டெல்லியில் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 12:52 pm
bjp-to-hold-high-level-meeting-with-office-bearers-of-all-morchas-today

டெல்லியில் பாஜகவின் உயர்மட்டக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல் தலைவர் ஜே.பி.நட்டா இதில் கலந்துகொண்டுள்ளனர். மேலும், பாஜக உயர்மட்டக்குழு நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

ஜே.பி.நட்டா, பாஜகவின் செயல் தலைவராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் இதுவாகும். 

கர்நாடக அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த கூட்டத்தில் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசி சென்ற நிலையில், அங்கு பாஜக உறுப்பினர் சேர்க்கும் அமைப்பை தொடங்கி வைத்தார். இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் நேற்று பாஜக உறுப்பினர் சேர்க்கும் அமைப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனால் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close