21 அமைச்சர்கள் ராஜினாமா: முதல்வர் தலைக்கு மேல் கத்தி!

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 03:58 pm
21-ministers-resigns-in-karnataka

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மாநில அமைச்சர்கள் 21 பேர் தங்கள் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக உள்ளார். குறைந்த எம்.எல்.ஏ.,க்கள் உடைய இவரது கட்சி ஆட்சி அமைக்க, அதிக எம்.எல்.ஏ.,க்களை உடைய காங்கிரஸ் கட்சி உதவி செய்து வருகிறது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நடத்தும் கூட்டணி ஆட்சியில், இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கின்றனர். 

இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அவர்களில் சிலர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். இதனால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சிக் கட்டிலில் நீடிக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, அந்த மாநில அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 21 அமைச்சர்கள் தங்கள் அமைச்சர் பதவியை திடீரென இன்று ராஜினாமா செய்துள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close