இந்திய அணியின் போராட்ட குணத்திற்கு பிரதமர் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 08:51 pm
pm-modi-congratulates-indian-team-for-their-fighting-against-newzeland

‛‛உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தாலும், கடைசி வரை வெற்றிக்காக போராடிய வீரர்களின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது. அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என, பிரதமர் நரேந்திர மாேடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அணி வீரர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சாேகத்தில் மூழ்கியுள்ளனர். 
இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மாேடி கூறியிருப்பதாகவது:
‛‛ நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. எனினும், கடைசி வரை வெற்றிக்காக போராடிய இந்திய அணி வீரர்களின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்தையும் மிக சிறப்பாக செய்தனர். வெற்றியும், தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம். அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என அவர் பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close