பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார் தங்க மங்கை பி.வி.சிந்து

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 03:36 pm
pv-sindhu-meets-pm-narendra-modi

தங்க மங்கை பி.வி.சிந்து டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த 25-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இதில், சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் ஒகுஹாராவை தோற்கடித்து, தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று தாயகம் திரும்பிய பி.வி.சிந்து, டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததை தொடர்ந்து பிரதமரை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சிந்துவின் பயிற்சியாளர் கோபி சந்து, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உடனிருந்தனர்.

முன்னதாக, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது, சிந்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close