லடாக்கில் சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு: பேச்சு வார்த்தைக்குப் பின் மோதல் தவிர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 12:35 pm
chinese-soldiers-aggression-in-ladakh

லடாக்கில் உள்ள பாங்கியோங்ட்சோ என்ற இந்தியாவின் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்து மீறி நுழைந்துள்ளதை அங்கு ரோந்து சென்ற இந்திய வீரர்கள் கண்டறிந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்திய இராணுவ வீரர்கள்  லடாக்கின் வடக்கு பாங்கியோங் கரையில் ரோந்து மேற்கொண்டிருந்த நேரத்தில், சீன இராணுவம், அங்கே ஆக்கிரமித்து முகாமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் சீன வீரர்கள் இந்திய இராணுவத்தினருக்கு அங்கு நுழைய அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இரு நாட்டின் முக்கிய  அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா - சீனாவிற்கு இடையேயான  எல்லை கட்டுப்பாடானது, பாங்கியோங் ட்சோ வழியாக கடப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது இது மாதிரியான  மோதல்கள்  இயல்பாகவே நடந்து வருவதாகக் கூறப்படுகிறது., பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ- ஜின்-பிங்கும் வரும் அக்டோபர் மாதம் சந்திக்கவிருக்கும் நிலையில் இந்த மோதல் நடபெற்றுள்ளது  குறிப்படதக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு சீன அதிபரின் இந்திய வருகையின் போது சீன வீரர்கள் நம் எல்லைப் பகுதியில் இத்தகைய மோதலில் ஈடுபட்டனர் என்பது நினைவு கூறத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close