பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளிப்பது வருத்தமளிக்கிறது - இந்தியா

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 01:19 pm
china-s-support-for-pakistan-is-sad-india

பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளிப்பது வருத்தமளிப்பதாக சீன கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

சீனவின் கம்யூனிஸ்ட் கட்சியானது இந்திய பாஜக கட்சியின் அமைப்புக் குறித்தும், நடவடிக்கைகள் மற்றும் ஆட்சிக்கால முடிவுகள் குறித்தும் அறிய விரும்பி பாஜகவிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தலைமையிலான பாஜக கட்சியை சேர்ந்த 11 பேர் கொண்ட குழு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 

இரு நாடுகளின் வர்த்தக ரீதியான உரையாடலின் போது, பாகிஸ்தானின் பயங்கரவாத நிதியுதவி குறித்து உலக நாடுகள் அனைத்தும் அறிந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு பெய்ஜிங் ஆதரவளிப்பது சீனப் பொருட்களை அதிகம் உபயோகிக்கும் இந்தியர்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக பாஜக குழு குறிப்பிட்டுள்ளது.

அதில் ஜம்மு - காஷ்மீர் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ரவீஷ் குமார், ஜம்மு - காஷ்மீரை பாக்கிஸ்தானுடன் இணைத்துப் பேசுவது தவறு என்றும், அது எப்போதும் "இந்தியாவின்" மாநிலமாகவே திகழும் என்றும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய சந்திப்பில், உலக ஒற்றுமைக் குறித்து பாகிஸ்தான் பேசியது வேடிக்கை அளிப்பதாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close