சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே - பிரைன் டால்

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 04:29 pm
the-return-of-special-status-was-for-the-development-of-kashmir-bryn-dahl

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றது காஷ்மீரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் வளர்ச்சியடையச் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார் ஐரோப்பிய கமிஷனின் முன்னாள் தலைவர் பிரைன் டால்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய கமிஷனின் முன்னாள் தலைவர் பிரைன் டால் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், "இந்தியாவின் இம்முடிவு வரவேற்கத் தக்கது, இதனால் காஷ்மீர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து, அவர்கள் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். மேலும், அரசியலிலும் தங்களுக்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்க இயலும்".
இந்தியா - பாகிஸ்தான் குறித்து பேசிய அவர், "கடந்த வருடம் மே மாதம் 21 - ம் தேதி, இம்ரான் கான் ஆட்சியில், " கில்கித் -பல்திஸ்தான் தன்னாட்சி சட்டம் 2009" ஐ மாற்றி   "கில்கித் பல்திஸ்தான் 2018" என்ற  புதிய சட்டத்தை விருப்பத்திற்கு மாறாக பிறப்பித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவும் பாகிஸ்தானின் இச்செயலிற்கு கண்டனம் தெரிவித்தது. சொல்லப்போனால் கில்கித் பல்திஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும்". இப்போது காஷ்மீர் மக்கள் பாவம் எனக் கூறி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய சந்திப்பில் வருந்தும் பாகிஸ்தானுக்கு, அப்போது கில்கித் - பல்திஸ்தானின் நிலை பாவமாக தோன்றவில்லை போலும் என்று சிறிது நக்கலாகவும் கூறினார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close