மோடியின் ஹூஸ்டன் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ட்ரம்ப்!

  அபிநயா   | Last Modified : 15 Sep, 2019 04:19 pm
prime-minister-narendra-modi-has-planned-to-visit-america-this-month

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன், பிரதமர் மோடி, அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள, ஆற்றல்களின் தலைநகரமாக கருதப்படும் ஹூஸ்டன் நகரில், இந்திய - அமெரிக்க மக்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடலும், ஆற்றல் உற்பத்தியாளர்களுடனான தொழில் முறை வட்ட மேசை மாநாடும் நடைபெற இருக்கிறது.

அந்த இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்திய - அமெரிக்க மக்களுடனான கலந்துரையாடலில் அவர் பங்கு கொண்டால், அவரே இதில் பங்கு கொள்ளப் போகும் முதல் அமெரிக்க அதிபராவார். செப் 22., அன்று நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு, "ஹௌடி மோடி" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியை, ஹூஸ்டன் இலாப நோக்கமற்ற அமைப்பான டெக்சாஸ் இந்திய சபை தொகுத்து வழங்கவுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கலந்து கொள்வார் என்று தெரிய வந்துள்ளது

2014 - ல் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, யுஎஸ் - ன் காங்கிரஸ்காரர்கள் பங்கு கொண்ட காரணத்தால் இம்மாநாட்டிலும் அவர்களின் வருகை எதிர்ப்பார்க்கப் படுகிறது. யுஎஸ் உடனான இந்தியாவின் ஆற்றல் இறக்குமதி ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்திட்டப்பட்டு, வர்த்தக ரீதியில் நல்ல நிலையை எட்டியுள்ளதால், ஆற்றல் உற்பத்தியாளர்களுடனான மாநாட்டிலும், ட்ரம்ப் -ன் வருகை எதிர்ப்பார்க்கப் படுகிறது.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் செப் 21., முதல் செப் 27., வரை என்று முடிவாகியுள்ள நிலையில், இதை தொடர்ந்து அவர் செப் 27., அன்று நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் கலந்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. மேலும், இரு தலைவர்களும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close