தந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா!!

  அபிநயா   | Last Modified : 17 Sep, 2019 03:50 pm
farooq-abdullah-got-detained-based-on-public-safety-act

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சராக பதவி வகித்த ஷேக் அப்துல்லா இயற்றிய பொது அமைதியை குலைப்பவர்களை விசாரணையின்றி சிறையலடைக்கும் சட்டத்தின் கீழ் அவருடை மகன் ஃபரூக் அப்துல்லா நேற்று சிறைவைக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதையொட்டிது ஜம்மு காஷ்மீரின் பல பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகிய மூவரும் தொடர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஃபரூக் அப்துல்லாவின் 40 ஆண்டுகால நண்பரெனக் கூறிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதியான மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, உச்ச நீதிமன்றத்தில், ஃபரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதையடுத்து ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் எனப்படும் பி.எஸ்.ஏ வின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தார் என்று குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம், குற்றம்சுமத்தப்பட்டவரை, விசாரணையின்றி 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் ஃபரூக் அப்துல்லா வின் தந்தை ஷேக் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close