பிரதமரை சந்திப்பதற்கு முன் அவருடைய மனைவியை சந்தித்த  மம்தா பானர்ஜி

  அபிநயா   | Last Modified : 18 Sep, 2019 01:11 pm
mamata-banerjee-meets-pm-s-wife-at-kolkata-airport

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்க இருந்த நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து, அவரது மனைவி ஜஷோதாபென்னை  சந்தித்து உரையாடினார்.

 நரேந்திர மோடியின்  மனைவியான ஜஷோதா பென், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான்பாத் நகருக்கு 2  நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார்.  அது முடிவடைந்த நிலையில், குஜராத் செல்வதற்காக இன்று காலை கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தார். 

டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருந்த மம்தா பானர்ஜியும் இன்று காலை கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, பிரதமரின் மனைவி விமானத்திற்காக காத்திருக்கும் செய்தியை மம்தா அறிந்ததும், அவரை நேரில் சந்தித்து உரையாடினார். ஜஷோதா பென்னிற்கு மம்தா சேலையொன்றை பரிசளித்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாநில டிஜிபியாக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ்குமார், சாரதா சிட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சிபிஐயினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மம்தா  பானர்ஜி  பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close