தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

  அபிநயா   | Last Modified : 19 Sep, 2019 11:53 am
india-s-first-defense-minister-to-fly-in-tejas-aircraft

இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பறந்தார்.

 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கார்நாடகா மாநிலம் பெங்களூரில், இந்திய தொழில் நுட்பத்தில் கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தில் இன்று ஏர் வைஸ் மார்ஷல் என்.திவாரியுடன்  விமானிகளுக்கான உடையில் பறந்தார்.

தேஜஸ் போர் விமானம் மிகவும் மென்மையாகவும் இலகுவாகவும் பறந்ததாகவும், அது அவருக்கு சிலிர்ப்பான நல்ல அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறினார். முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காரணத்தினால் தான் அவர் தேஜஸ்-ஐ தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் சிறிது நேரம் இயக்கினார் என்று அவருடன் பயணித்த விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேஜஸ் விமானம், எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் தயாரிக்கும் நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும். சமீபத்தில், கோவாவில் நடந்த தேஜஸ் போர் விமானத்தின்  தரையிறக்கும் சோதனை வெற்றி பெற்றதையடுத்து,  இந்திய விமானப்படைக்காக,  ஹிந்துஸ்தான் நிறுவனம், 83 தேஜஸ் விமானங்களை ரூ. 50,000 கோடி மதிப்பில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close