விமான தளம் மீண்டும் திறப்பு

  அபிநயா   | Last Modified : 19 Sep, 2019 03:47 pm
closed-runway-opened-after-india-china-standoff-last-week-in-ladakh

சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், திடீர் தாக்குதலுக்கு தயாராக இருக்கவும், அருணாச்சல பிரதேசம் சாங்க்லாங்கிலுள்ள விஜயநகரில், மூடிவைக்கப்பட்டிருந்த விமான தளம் மீண்டும் திறக்கப்பட்டு, செவ்வாயன்று இந்திய இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். 

தலைமை அதிகாரி லெப்டினன்ட் ரன்பீர் சிங் அப்பயிற்சியை நேரில் சென்று பார்வையிட்டார். அவர் கூறியதாவது, "இந்திய இராணுவ வீரர்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திறமையான தாக்குதலுக்காக இராணுவத்தின் எல்லா துறையை சேர்ந்த வீரர்களும் இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்திய இராணுவம் எவ்வகை தாக்குதலையும் தகர்தெறியும்" எனக் கூறினார்.

விஜயநகரில், மூடிவைக்கப்பட்டிருந்த விமான தளம் ஏர்  மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் மற்றும் லெப்டினன்ட் அனில் சவ்கான் இருவரும் திறந்து வைத்தனர். விஜயநகரில் சாலை வழி போக்குவரத்து இல்லை என்பதும், ஹெலிகாப்டர்கள் மூலமே அந்நகரை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்கள் முன்பு, இந்திய-சீனா இராணுவ படைகள் லடாக்கில் வைத்து நேருக்கு நேர் மோதிக் கொண்டதன் விளைவாகவே, தற்போது அங்கே இராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தின், கிழக்கு லடாக் பகுதியிலே இந்திய சீன எல்லை அமைந்துள்ளதால், அந்த பகுதியில் பாதுகாப்பு எப்போதும் கூடுதலாகவே காணப்படும் நிலையில், தற்போது நடந்த மோதலுக்கு பின் இன்னும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close