புதிய காஷ்மீர் விரைவில் சொர்க்கபுரியாக மாறும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

  அபிநயா   | Last Modified : 19 Sep, 2019 04:17 pm
indians-together-should-make-kashmir-as-a-heaven-on-earth-narendra-modi

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, "காஷ்மீரை சொர்க்கமாக மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர், "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதால், இனி இந்தியாவின் பிற மாநிலங்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் காஷ்மீரும் பெரும். காஷ்மீரின் நிலையை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்கள் வைத்துள்ளது. காஷ்மீரின் நிலையும், காஷ்மீர் மக்களின் நிலையும் இனி நிச்சயம் மேம்படும்.

இந்தியாவின் ஒரு பகுதிதான் காஷ்மீர். இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய காஷ்மீரை உருவாக்க வேண்டும். பூமியின் சொர்க்கமாக காஷ்மீர் திகழ வேண்டும்." எனக் கூறினார்.

மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையடுத்து, போராட்டங்களும் கலவரங்களுமாக இருந்த காஷ்மீர், தற்போது சீராகி இயல்பு நிலை திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close