தேர்தல் ஆணையர் லவாசாவின் மனைவிக்கு வருமானவரித்துறை சம்மன்

  அபிநயா   | Last Modified : 24 Sep, 2019 12:22 pm
income-tax-department-questions-election-commissioner-s-wife

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவி நோவல் லவாசா 10 நிறுவனங்களின் ஆலோசகர் மற்றும் இயக்குனராக பணியாற்றியபோது அவர் பெற்ற சம்பளம் மற்றும் இதர சகாயங்கள் குறித்து நேரில் வந்து விளக்கமளிக்குமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அசோக் லாவாசா சுற்றுச்சூழல் துறையில் துணைத் தலைவராக கடந்த ஆகஸ்ட் 2014 முதல் ஏப்ரல் 2016 வரை பணியாற்றினார். பின்பு நிதி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் கடந்த ஜனவரி 2018 முதல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 

நிதி துறையில் இவர் பணியாற்றிய போது இவரது மனைவி, டாடா உட்பட 10 நிறுவனங்களின் ஆலோசகர் மற்றும் இயக்குநராக பணியாற்றயபோது அவர் பெற்ற வருமானம் மற்றும் இதர சகாயங்கள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய தேசியத் தலைவர் அமித் ஷா ஆகிய இருவர் மீதும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து புகார் அளித்தன.

அதில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் குறி்த்து தேர்தல் ஆணையர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது 2 ஆணையர்கள், அந்த புகார்களில் முகாந்திரமில்லை என முடிவெடுத்தபோதெல்லாம், அதற்கு எதிராக அந்தக் கூட்டங்களில் வாக்களித்தவர் அசோக் லவாசா என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்று இக்கட்சிகள் வழக்கு தொடுத்தபோதும், தேர்தல் ஆணையம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த புகார்களை நிராகரித்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

அதாவது தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று பொதுவானகுற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அதுமட்டுமின்றி அவர் முக்கியமான அரசு பதவிகளை வகித்துபோது, அவருடைய மனைவி பல பெருநிறுவனங்களில் ஆலோசகராவும் இயக்குநராகவும் பணிபுரிந்து பல சகாயங்களை பெற்றார் என்றும் அவர் மனைவி பதவி வகிக்கும் நிறுவனங்களுக்கு அசோக் லவாசா முறைகேடான வகைகளில் பல சகாயங்களை வழங்கியுள்ளார் என்பதும் அவர் மீது நீண்ட காலமாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close