நரேந்திர மோடிக்கு "குலோபல் கோல்கீப்பர்ஸ் விருது"!!!

  அபிநயா   | Last Modified : 25 Sep, 2019 10:02 am
global-goalkeeper-award-for-prime-minister-narendra-modi

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம், "ஸ்வச் பாரத் அபியான்" னிற்காக - பிரதமர் நரேந்திர மோடிக்கு, "குலோபல் கோல்கீப்பர் அவார்ட்"  என்ற விருதை அளித்து பெருமை படுத்தியுள்ளது.

"ஸ்வச் பாரத் அபியான்" - ஐ கடைபிடிக்க வேண்டும் என்றுக் கூறுவதோடு மட்டுமில்லாமல், தானே எடுத்துக்காட்டாக முன்னின்று அதை கடைபிடிக்கும் தலைவர் மோடி என்ற காரணத்தினால், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம், அவருக்கு "குலோபல் கோல்கீப்பர்ஸ் அவார்ட்"  என்ற விருதை வழங்கியுள்ளது.

இது குறித்து பிரதமர் கூறுகையில், "மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டில் எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல, இந்திய மக்களாகிய 130 கோடி பேருக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் நான் இதை கருதுகிறேன்.

"ஸ்வச் பாரத் அபியான்" மூலம் 11 கோடி கழிவறைகள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளன. கழிவறை வசதி இல்லாத காரணத்தினால், பெண் குழந்தைகள் பள்ளி செல்ல மறுக்கும் நிலை இனி நம் இந்தியாவில் ஒரு போதும் நடக்கக் கூடாது. உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் சுகாதாரம் அதிகரித்துள்ளதன் விளைவாக இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிராமங்களிலேயே இந்தியாவின் ஆன்மா உள்ளது என்ற மஹாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் நம்முடைய இந்தியாவின் கிராமங்கள் முன்னேற்றமடைந்து, இந்தியா வெற்றி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. "ஸ்வச் பாரத் அபியான்", இந்தியாவின் சுகாதாரத்தை மேம்படுத்த மட்டுமல்லாது, ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்து நாம் வகுத்த இலக்குகளை அடையவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது" எனக் கூறினார்.

மேலும், "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அங்கிருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். அந்த பூங்கொத்திலிருந்த கீழே விழுந்த ஒரு பூவை பிரதமர் தாமாகவே கீழிருந்து எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தார். அவரின் இந்த செயல் சுற்றியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம், அமெரிக்காவிலும் "ஸ்வச் பாரத்" -ஐ கடைபிடிக்கிறார் மோடி எனக் கூறி அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

""ஸ்வச் பாரத் அபியான்", 2014 வருடம், மோடி பிரதமராக பணியேற்ற மூதல் ஆண்டு தொடங்கப்பட்டது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close