மோடி மற்றும் அஜித் தோவல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுக்கத் திட்டம் - உளவுத்துறை!!

  அபிநயா   | Last Modified : 25 Sep, 2019 12:39 pm
jaish-e-mohammed-readying-special-squad-to-target-pm-modi-nsa-ajit-doval

ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்குப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், இந்தியா மீது எல்லா வகையிலும் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகின்றனர். இந்திய இராணுவம் அவர்களின் எல்லா தாக்குதல்களையும் முறியடித்து, இந்தியாவுக்கும், மக்களுக்கும் எந்த பாதிப்பும் இன்றி காத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது  இந்திய விமானப்படை  வைத்தே தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு, இந்தியாவை பழி வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்கு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது ஒரு காரணமாக அமைந்து விட்டது என்று உளவு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று புல்வாமாவில் நடத்திய தாக்குதலை போல, இந்தியாவையும் அதன் மக்களையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் பலமுறை தாக்குதல்கள் நடத்த முயன்று வருகின்றனர்.

தற்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது தாக்குதல்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சித் தகவலை உளவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close