இந்தியாவுடனான அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்திய பாகிஸ்தான்

  அபிநயா   | Last Modified : 28 Sep, 2019 12:42 pm
pakistan-stops-postal-exchange-with-india

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றதையடுத்து, இந்தியாவின் மீது அதிருப்தியில் இருந்த பாகிஸ்தான் தற்போது, இந்தியாவுடனான அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்தி விட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, பாகிஸ்தானிலிருந்து வரும் வெளியீடுகள், பத்திரிகைகள், இதழ்கள், மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் உட்பட அனைத்தையும் பாகிஸ்தான்  நிறுத்தி விட்டதாக இந்திய அஞ்சல் துறை கூறியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் தலைமை அதிகாரியான அஜய் குமார் ராய் கூறுகையில், "பாகிஸ்தானின் சுங்கத்துறையிடமிருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வந்த ஆர்டரின் படி, இந்தியா பாகிஸ்தான் இடையான அஞ்சல் பரிமாற்றங்கள் ஆகஸ்ட் 27 க்கு பின் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானுடனான அஞ்சல் பரிமாற்றம் சவுதி அரேபியா விமான நிறுவனம் மூலம் நடைபெறும். தற்போது அனைத்து பரிமாற்றங்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இது இந்தியாவின் முடிவல்ல, பாகிஸ்தானின் முடிவு என்பதையும் நாங்கள் தெளிவு படுத்த விரும்புகிறோம்" எனக் கூறினார்.

பாகிஸ்தானின் இந்த முடிவினால், இந்தியாவை சேர்ந்த பஞ்சாப் மாநிலத்திற்கு, பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்படும் "பஞ்சாப் தே ராங்" (ராசலீலா) எனப்படும் கலாச்சாரம் மற்றும் இலக்கிய நயம் நிறைந்த இதழ் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், இந்திய பகுதியை சேர்ந்த பஞ்சாப் மக்கள், பாகிஸ்தானின் இந்த செயலினால் வருத்தத்தில் உள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close