இந்திய கடற்படையுடன் இணைந்த ஐஎன்எஸ் காந்தேரி

  அபிநயா   | Last Modified : 28 Sep, 2019 06:10 pm
second-scorpene-class-submarine-ins-khanderi-to-be-inducted-in-the-indian-naval-service

இரண்டாம் ஸ்கார்ப்பின் வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கி ஐஎன்எஸ் கல்வாரியை தொடர்ந்து, ஐஎன்எஸ் காந்தேரியும், இன்று (சனிக்கிழமை), இந்திய கடற்படையுடன் இணைந்ததுள்ளது. 

ஐஎன்எஸ் காந்தேரி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த உள்நாட்டு நிறுவனமான, மஸ்கான் டாக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் சோதனை ஓட்டம் முடித்து, மும்பையில் இன்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "காந்தேரி என்ற பெயர், கடலின் ஆழம் வரை சென்று தன் இரையை பிடிக்கக்கூடிய திறன் வாய்ந்த மீனின் பெயராகும். அது போல மிகச் சிறந்த திறன் கொண்ட  ஐஎன்எஸ் காந்தேரியும் இன்று இந்திய கடற்படையுடன் இணைந்து விட்டது. 26/11 ல் நடந்த மும்பை தாக்குதலை போல இந்தியாவின் கடலோரங்களில் தாக்குதல் நடத்தவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ்அவர்கள் யாரானாலும் அவர்களின் எண்ணம் இனி ஒரு போதும் நிறைவேற போவதில்லை" எனக் கூறினார்.

காந்தேரியின் தயாரிப்பாளர்களான மஸ்கான் டாக் லிமிடெட் கூறுகையில், "காந்தேரியின் அதிகபட்ச வேகம் 20 நாட்டிகல் மைல்களாகவும், கடலின் ஆழம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

டீசல் - எலக்ட்ரிக் எரிபொருள் மூலம் இயங்கும் இந்த கப்பல், கடலின் ஆழத்தில் இருக்கும்போதும், அதன் உள் இருக்கும் வீரர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை தன்னகத்தே நீண்ட நாட்களுக்கு தேக்கி வைக்கும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படையின் தேவை அறிந்து, அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனக் கூறினர்.

மூன்றாவது ஸ்கார்ப்பின் வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கி ஐஎன்எஸ் கரஞ்ச் கடந்த ஜனவரி 2018 ஆம் ஆண்டு இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close