பிட் இந்தியா இயக்கம் மூலம் ஸ்வச் பாரத் அபியானை மக்களுக்கு நினைவூட்டுகிறோம் - கிரண் ரிஜிஜூ

  அபிநயா   | Last Modified : 02 Oct, 2019 01:44 pm
fit-india-plug-run-is-to-make-people-remember-about-swachh-bharat-abhiyan-kiren-rijiju

"பிரதமர் நரேந்திர மோடியின், "ஸ்வச் பாரத் அபியான்" னையை குறித்து மக்களுக்கு மேலும் உணர்த்த "பிட் இந்தியா இயக்கம் உதவும்" என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

மஹாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "பிட் இந்தியா ப்ளாக் ரன்" என்ற ஓட்டப்பந்தயத்தை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நமது தேச தந்தையின் 150வது பிறந்தநாளை நம் நாடே மிக மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவரின் கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்துடனும், முனைப்புடனும், நம் பிரதமர் பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். இதில் மிக முக்கியமான, "ஸ்வச் பாரத் அபியான்" குறித்து இந்த நாளில் மக்களுக்கு நினைவூட்டும் வகையில், "பிட் இந்தியா ப்ளாக் ரன்" என்ற ஓட்டப்பந்தயத்தின் மூலம் நாட்டை சுத்தமாக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டத்தின் போதே கண்ணில் படும் குப்பைகளை அகற்றுவதன் மூலம், மக்களின் உடலும் சுத்தமடைந்து நம் மாடும் சுத்தமாகும் என்பதையே இந்த செயல் மூலம் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்" எனக் கூறினார்.

டெல்லியில் இன்று (அக்டோபர் 2), நடைபெறும் இந்த "பிட் இந்தியா ப்ளாக் ரன்" னில், பஜக தலைவர் மனோஜ் திவாரி மற்றும் மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் பங்கு பெற உள்ளனர்.

இந்த முயற்சி குறித்து, "மன்கிபாத்" ல் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இத்தகைய புது முயற்சிகளில் ஈடுபட்டு நம் தேச தந்தையின் கனவினை நனவாக்க இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close