'விதிகளை யார் மீறினாலும் நான் கேள்வி கேட்பேன்’ : வீரர்களை மிரளவைக்கும் குப்தா

  அபிநயா   | Last Modified : 03 Oct, 2019 07:54 pm
sanjeev-gupta-mystery-man-behind-conflict-of-interest-crisis-in-bcci

மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினரும், தொழிலதிபருமான சஞ்சீவ் குப்தா (45), பல பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதே, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறியதாக 400-க்கும் மேற்பட்ட புகார்களை மெயில் மூலம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பியுள்ளார். 

கல்லூரியில் படிக்கும் போது கிரிக்கெட் அணியில் இருந்த சஞ்சீவ் குப்தா, தற்போது தொழிலதிபராகவும், மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். கிரிக்கெட் துறையில் நடக்கும் சிறு தவறுகளை கூட இவர் தட்டி கேட்க தவறுவதில்லை. மிக பிரபலமான வீரரானாலும், இவரின் கண்களில் இருந்து தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க இயலாது. யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை இவர் சுட்டிக்காட்டாமல் விடுவதில்லை.

சமீபத்தில் இவர் அனுப்பிய மெயிலில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ். லக்ஷமண் ஆகிய மூவரும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். அதாவது, கிரிக்கெட் வீரர்கள், ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகிக்கக்கூடாது. லோதா விதிமுறையில், ஒரு நேரத்தில் ஒரு பதவியே ஒரு வீரர் வகிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டி, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ். லக்ஷமண் ஆகியோர் மீது இவர் குற்றம் சாட்டியிருந்தார். இவரது மெயில் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்திற்கு வந்த மறு நொடியே, டெண்டுல்கர் தனது இரு பதவிகளில் ஒன்றான கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். 

இவரது குற்றச்சாட்டுகள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் கூறுகையில், "சஞ்சீவ் குப்தா குற்றம் சுமத்தியுள்ளார் என்றால் அதை ஒப்புக்கொள்வதே புத்திசாலித்தனம். அவரது குற்றச்சாடுகளில் இருக்கும் உண்மை கிரிக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும்" என்று கூறுகின்றனர்.

இவரின் இந்த செயல்கள் குறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனைத்து விதிமுறைகள் குறித்தும் நன்றாக தெரிந்து வைத்துள்ளவராக திகழும் குப்தாவிடம், விதிமுறைகளில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் கேட்கலாம் என்றும் அந்த அளவு கிரிக்கெட் துறையை நேசிக்கவும், அதன் விதிமுறைகளை பின்பற்றவும் செய்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது கிரிக்கெட் வாரியத்திற்கு வரும் மெயில்களில் பகுதிக்கு மேல் இவரிடமிருந்தே வருகின்றன. இது குறித்து சஞ்சீவ் கூறுகையில், "எனக்கு யாரிடமும் எந்த தனிபட்ட விரோதமும் இல்லை. கிரிக்கெட் வாரியத்தின் லோதா விதிகளை யார் மீறினாலும் நான் கேள்வி எழுப்புவேன். அதற்காக என்னை யார் என்ன கூறினாலும் அது குறித்து எனக்கு கவலையில்லை" எனக் கூறியுள்ளார்.

லோதா விதிமுறைகள், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் மோசடிக்கு பின்  உச்ச நீதிமன்றத்தால் இயற்றப்பட்டன. எனினும், கிரிக்கெட் வாரியத்தின் சில நடைமுறை சிக்கல்களால், லோதா விதிமுறைகள் அப்போது அமல்படுத்தப்படாமல், 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் வாரியத்துடன் சேர்ந்து, சில விதிமுறைகள் அமல் படுத்தபட்டன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close