குடியுரிமைப் பதிவேட்டை காட்டி மக்களை அச்சுறுத்துகிறார் அமித் ஷா - அமித் மித்ரா அலறல்

  அபிநயா   | Last Modified : 04 Oct, 2019 01:08 pm
amit-shah-is-using-nrc-to-scare-the-people-of-west-bengal-amit-mitra

சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியிருப்பவர்களை வெளியேற்ற உதவிடும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை காரணம் காட்டி மக்களை அச்சுறுத்தி வருகிறார் அமித் ஷா என்று மேற்கு வங்காள மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொல்கத்தா நகரில் நடைபெற்ற, தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்த பொது விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, " மேற்கு வங்காள மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேடுக்கான செயல்முறைகளை மேற் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என மாநில முதலமைச்சர் மம்தா கூறியிருந்தார். ஆனால், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஒருவரையும் நம் நாட்டில் வசிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அகதிகளாக வந்துள்ள இந்துக்களை பாதுகாக்கும் இந்தியா, அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களை வெளியே அனுப்பவும் தயங்காது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த பேச்சு, குடியுரிமைப் பதிவேட்டை காட்டி மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும்,  இது சட்டத்திற்கு எதிரானது என்றும் மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா குற்றம் சுமத்தியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close